
சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து முன்னணி நட்சத்திரமாக ஜொலிப்பவர் சிவகார்த்திகேயன்.
மறைந்த நெல் ஜெயராமன் மகனின் கல்விச் செலவை ஏற்றது, நலிந்த கலைஞர்களுக்கு உதவி செய்வது, ஏழை மாணவியின் டாக்டர் கனவை நிறைவேற்றியது என சிவகார்த்திகேயன் செய்து வரும் உதவிகள் ஏராளம்.
இந்நிலையில் தமிழக பாரம்பரிய விவசாயிகளின் பாதுகாப்பு சங்கம் மற்றும் ஐந்திணை வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை இணைந்து நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ‘நம்மாழ்வார்’ விருது வழங்க முடிவு செய்திருக்கிறது.
Patrikai.com official YouTube Channel