மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அமரன் திரைப்படம் 250 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன், ஆர் மகேந்திரன், விவேக் கிருஷ்ணன் ஆகியோர் தயாரித்துள்ள அமரன் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
சிவர்கார்த்திகேயன், சாய்பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படம் அனைத்து ரசிகர்ளிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை வரை 244 கோடி ரூபாய் வசூலித்த இந்தப் படம் நேற்று 250 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளது.
தமிழ் ஹீரோக்களில் ரஜினிகாந்த், கமலஹாசன் மற்றும் விஜய் இவர்களின் படங்கள் மட்டுமே இதுவரை 250 கோடிக்கு மேல் வசூலாகியுள்ள நிலையில் தற்போது இந்த எலைட் கிளப்பில் 4வது நபராக சிவகார்த்திகேயன் இணைந்துள்ளார்.
ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் 125 கோடி ரூபாய் வசூலித்த நிலையில் அமரன் திரைப்படம் சிவகார்த்திகேயனின் கேரியரில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்துள்ளது.
275 கோடி ரூபாய் நிச்சயம் என்ற நிலையில் சூர்யா நடிப்பில் வெளியாக உள்ள கங்குவா படம் பாக்ஸ் ஆபிஸில் ஏற்படுத்த உள்ள தாக்கத்தை பொறுத்தே சிவகார்த்திகேயன் 300 கோடி ரூபாய் கிளப்பில் இணைவாரா என்பது தெரியவரும்.