சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ‘மிஸ்டர் லோக்கல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு உள்ளது.
எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படத்துக்கு மிஸ்டர். லோக்கல் என பெயர் மாற்றப்பட்டுள்ளது.. ஏற்கனவே ராஜேஷ் இயக்கத்தில் சீமராஜா என்ற படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள நிலையில், மீண்டும் மிஸ்டர் லோக்கல் என்ற படத்தில் இருவரும் இணைந்துள்ளனர்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இந்த படத்தின் தலைப்பு ஏற்கனவே எஸ்கே13 என வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது, மிஸ்டர். லோக்கல் என பெயர் வைத்துள்ளார்கள்.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த போஸ்டரில் சிவகார்த்திகேயன் ஸ்டைலாக ஒரு நாற்காலியில் அமர்ந்து சிரித்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார்.
வரும் கோடை விடுமுறை நாட்களில் படம் வெளியாகும் என அறிவித்துள்ளார்கள்.
படத்திற்கு ஹிப் ஆப் தமிழா இசையமைத்துள்ளார். ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.
மிஸ்டர். லோக்கல் போஸ்டரை பார்த்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் டுவிட்டரில் டிரெண்ட் செய்து கொண்டாடி வருகிறார்கள்.