புதுச்சேரி மாநில திமுக சட்டமன்ற கட்சித் தலைவராக சிவா எம்எல்ஏ தேர்வு! திமுக தலைமை அறிவிப்பு

Must read

புதுச்சேரி:  புதுச்சேரி மாநில திமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக சிவா எம்எல்ஏ அறிவிக்கப்பட்டுள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் – திமுக கூட்டணியில், திமுக 13 இடங்களில் போட்டியிட்டது. இதில் திமுக 6 இடங்களை கைப்பற்றியது. அதன்படி,  உப்பளம், முதலியார்பேட்டை, வில்லியனூர், பாகூர், காரைக்கால் தெற்கு, நிரவி திருப்பட்டினம் ஆகிய 6 தொகுதிகள் திமுக வசமானது.

இதையடுத்து, திமுக சட்டமன்ற எம்எல்ஏக்கள் கூட்டம் இதில் சட்டமன்ற கட்சித்தலைவராக ஆர்.சிவா எம்எல்ஏ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்..

இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று (மே 08) வெளியிட்ட அறிவிப்பில், “நடைபெற்று முடிந்த புதுச்சேரி மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற சிவா எம்எல்ஏ, புதுச்சேரி மாநில திமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக அறிவிக்கப்படுகிறார்” என்று அதில் தெரிவித்துள்ளார்.

More articles

Latest article