ஐதராபாத்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக சீதாராம் எச்சூரி இரண்டாம் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இந்தக் கட்சியின் பொதுச் செயலாளராக கடந்த 2015ஆம் ஆண்டு வரை பிரகாஷ் காரத் பதவி வகித்து வந்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் அந்தப் பதவிக்கு சீதாராம் எச்சூரி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் ஆகும். அதன்படி இந்த வருடத்துடன் இவர் பதவிக்காலம் முடிவடைகிறது.
இந்த மாநாட்டில் இரண்டாம் முறையாக சீதாராம் எச்சூரி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அத்துடன் கட்சியின் செயல் குழு உறுப்பினர்களாக 95 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மார்க்சிஸ்ட் கட்சி விதிகளின் படி ஒருவர் மூன்று முறை பொதுச் செயலாளர் பதவி வகிக்கலாம் என்பது குறிப்பிடத் தக்கது.