டில்லி:

அமித்ஷா மீதான போலி என்கவுண்ட்டர் வழக்கை விசாரித்த மும்பை சிபிஐ நீதிமன்ற நீதிபதி லோயா மர்மமான முறையில் மரணமடைந்தார். இந்த மரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் எதிர்க்கட்சியினர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து மனு அளித்தனர்.

பின்னர், ராகுல் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘நீதிபதி லோயா மரணத்தில் சந்தேகம் உள்ளதாக லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.க்கள் பலருக்கும் சந்தேகம் உள்ளது. சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி) மூலம் இதை விசாரிக்க வேண்டும்.

முறையாக விசாரணை நடத்துதன் மூலம் அது அவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் ஆறுதலாக அமையும். ஜனாதிபதியிடம் அளித்த மனுவில் 114 எம்.பி.க்கள் மற்றும் 15 கட்சி தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளனர். சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்’’ என்றார்.