டில்லி:
தனது அண்ணன் மனைவியை பாலியல் ரீதியாக டார்ச்சர் செய்ததாக ஆம். ஆத்மி எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டுள்ளார்.
டில்லி யூனியன் பிரதேசத்தில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி ஆட்சி செய்கிறது. இக்கட்சியின் எம்.எல்.ஏக்களில் ஒருவர்
அமானத்துல்லா கான். இவர், டில்லி வக்ஃபு வாரியத் தலைவராக பதவி வகித்து வந்தார்.

இவர் மீது இவரது அண்ணி ஜாமியா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், அமானத்துல்லா கான் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தெரிவித்துள்ளார். அவருடன் சேர்ந்து தனது கணவரும் வரதட்சணை வாங்கி வருமாறு கொடுமைப்படுத்ததியதாகவும், கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அமானத்துல்லா கான் மீது வழக்கு பதிவு செய்த டில்லி போலீசார் அவரை கைது செய்தனர்.
ஏற்கெனவே ஆபாச, ‘சிடி’ வெளியான விவகாரத்தில் சிக்கி, ஆம் ஆத்மியில் இருந்து முன்னாள் அமைச்சர் சந்தீப் குமார் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார். அவர் மீது, பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்தையடுத்து, அவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel