டில்லி

மேகாலயா ஆளுநருக்கு எதிராக பாஜக கூட்டணிக் கட்சி சிரோமணி அகாலி தளம் போர்க்கொடி உயர்த்தி உள்ளது.

மேற்கு வங்க மாநில முன்னாள் பாஜக தலைவரும் தற்போதைய மேகாலயா அளுநருமான ததகாத்தா ராய் புல்வாமா தாக்குதலை ஒட்டி காஷ்மீரிகளை ஒதுக்க வேண்டும் என டிவிட்டரில் பதிவு இட்டிருந்தார்.  அந்த பதிவில் காஷ்மீர் மாநிலத்துக்கு யாரும் 2 வருடங்களுக்கு சுற்றுலா செல்லக் கூடாது எனவும் காஷ்மீரப் பொருட்களை வாங்கக்கூடாது எனவும் மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த பதிவுக்கு எதிர்க்கட்சிகளும் பொது மக்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.   பல எதிர்க்கட்சிகள் ததகாத்தா ராய் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுத்துள்ளன.   வெகுநாட்களாக பாகவுடன் கூட்டணியில் உள்ள கட்சியான சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நரேஷ் குஜ்ரால் இந்த விவகாரத்தில் ராய்க்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

நரேஷ் குஜ்ரால் செய்தியாளர்களிடம், “கடந்த 1980 களில் சீக்கியர்கள் மீது நடந்த தாக்குதல் போல மீண்டும் யார் மீதும் தாக்குதல் நடக்கக் கூடாது.  காஷ்மீர் மாநிலத்தில் சில சமுதாயத்தினர் தீவிரவாத ஆதரவாளர்களாக இருக்கலாம்.  அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கௌம்.   அதனால் அந்த சமுதாயத்தினர் அனைவரையும் குற்றவாளிகள் என கருதக் கூடது.

ததகாத்தா ராய் போன்றோர் ஆளுநராக நியமிக்கப்பட்டது துரதிருஷ்ட வசமானது.  ஜனாதிபதி ராம் கோவிந்த் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட வேண்டும்.  நமது மதச்சார்பற்ற குடியரசு நாட்டின் மாண்பை ராய்  போன்றோர் குலைக்க அனுமதிக்க கூடாது.

பஞ்சாப் பிரிவினை வாதிகளுக்கு பாகிஸ்தான் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேலாக ஆதரவு அளித்தது.  ராணுவ நடவடிக்கைக்கு பின் தீவிர வாதம் அழிந்தது.   ஆனால் சீக்கியர்கள் மீதுள்ள சந்தேகம் தொடந்தது.  சிக்கிய இனம் இந்திய சுதந்திரத்துக்க்காக போராடியதெல்லாம் மறந்து போய் தீவிர தாக்குதலை சந்தித்தது.” என தெரிவித்துள்ளார்.