சென்னை: தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் பூர்த்தி செய்த எஸ்ஐஆர் படிவத்தை ஒப்படைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடையும் நிலையில், மேலும் 3 நாட்கள் நீட்டிப்புசெய்து,  டிச. 14 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி உள்ளது இந்திய தேர்தல் ஆணையம்,

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த நடைமுறையான, எஸ்ஐஆர் படிவத்தை பூர்த்தி செய்து ஒப்படைப்பதற்கான கால அவகாசம் டிச. 14 ஆம் தேதி வரை ந நீட்டித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதைத்தொடர்ந்துருரைவு வாக்காளர்கள் பட்டியல் வரும் டிச. 19 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளின் கோரிக்கைகளைத் தொடர்ந்து, தமிழ்நாடு, குஜராத், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கான சிறப்பு சுருக்கத் திருத்த அட்டவணையை தேர்தல் ஆணையம் புதுப்பித்துள்ளது.

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நவம்பர்  4-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிக்காக, தமிழ்நாட்டின் 6.41 கோடி வாக்காளர்களில் 6.23 கோடி பேருக்கு கணக்கீட்டுப் படிவங்கள் விநியோகிக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கணக்கீட்டுப் படிவங்களைப் பெற்றுக்கொண்ட வாக்காளர்கள் தங்கள் படிவங்களை பூர்த்தி செய்து, வரும் டிச. 14-ஆம் தேதி வரை பிஎல்ஓ-க்கள் அல்லது வாக்காளா் உதவி மையத்தில் சமர்ப்பிக்கலாம். கணக்கீட்டுப் படிவங்களைப் பூர்த்தி செய்து ஒப்படைத்துள்ள அனைத்து வாக்காளா்களின் பெயா்களும் டிச. 19-இல் வெளியிடப்படும் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறும். டிச. 14-க்குள் கணக்கீட்டுப் படிவத்தை சமா்ப்பிக்காதபட்சத்தில், அந்த வாக்காளரின் பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாது. மூன்று முறை வீடு தேடி சென்றும் கணக்கீட்டுப் படிவம் வழங்க முடியாத வாக்காளர்களின் பெயர்கள், வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாது என அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், 2002/2005 வாக்காளர் பட்டியலில் ஒரு வாக்காளர் தனது பெயர் அல்லது உறவினரின் பெயரைக் கண்டறிய இயலாத நிலையில் டிச. 14-க்குள் பிற விவரங்கள் நிரப்பப்பட்ட கணக்கீட்டுப் படிவத்தை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் ஒப்படைத்தால், அந்த வாக்காளரின் பெயா் டிச. 19-இல் வெளியிடப்பட உள்ள வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

வரைவு வாக்காளர் பட்டியலில் ஒரு வாக்காளரின் பெயர் இல்லையெனில், உரிமைகோரல் மற்றும் மறுப்புரை காலத்தில் படிவம் 6-உடன் உறுதிமொழிப் படிவத்தை இணைத்து அவரது பெயரைப் புதிதாக வாக்காளா் பட்டியலில் சோ்க்க விண்ணப்பிக்கலாம். தொடர்ந்து, உரிமைகோரல் மற்றும் ஆட்சேபணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]