சுப்ரமணியபுரம் படத்தில் மதுரை குலுங்க என்ற பாடல் பாடியதுடன் 300க்கும் மேற் பட்ட படங்களில் பாடியிருக்கும் வேல் முருகன் எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது, தர்மபிரபு ஆகிய படங்களில் நடித்தும் உள்ளார். அசுரன் படத்தில் இவர் பாடிய ‘கத்தரி பூவழகி…’ பாடல் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இவர் கொரோனா நோய் தொடர்பாக ஒரு விழிப்புணர்வு குறும் படத் தில் சம்பளமே இல்லாமல் நடித்து கொடுத் துள்ளார்.
கொரோனா நோய்க்காக பல்வேறு தனிப் பாடல்கள் வெளியிடப்பட்டாலும் வேல் முருகன் நடித்து வெளியாகியிருக்கும் ‘பச்சை மண்டலம்’. கொரோனா நோயால் பாதிக் கப்பட்டு குணமான மனிதர்களை நாம் ஒதுக்கி வைக்கவோ புறக்கணிக்கவோ கூடாது என்பதையும், அவர்களை மனிதாபிமானத் தோடு எப்படி நடத்த வேண்டும் என்பதையும் உணர்த்தும் வகையில் இந்த குறும்படம் அமைந்துள்ளது. இந்த குறும்படத்திற்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் ஆதரவும் பாராட்டுகளும் குவிகின்றன. குறும்படத்துக்கு கொரோனா நோயை வெல்ல போராடும் அரசு அதிகாரிகளும் மருத்துவர்களும் சுகாதாரப் பணியாளர்களும் கூட பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
‘பச்சை மண்டலம்’ குறும்படத்தை ஷில்டன் தேவராஜ் இயக்கியுள்ளார். கைஷோ கிரியேஷன்ஸ் சார்பில் ஆர்.நாக சுப்ரமணியம் கதை எழுதி தயாரித்துள்ளார். கண்மணி ராஜா திரைக்கதை வசனத்தை எழுத, தஜ்மீல் ஷெரீப் இசையமைத்துள்ளார்.
இதில் பாடகர் வேல் முருகனுடன் சிற்றரசு, ரம்யா, சிவரஞ்சனி உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.
#R.Naga.Subramaniyam #kanmani Raja
#Subramanaiyapuram #Patchaimandalam
#சுப்ரமணியபுரம் #வேல்முருகன் #கண்மணிராஜா #பச்சைமண்டலம்