‘என்னடி முனியம்மா கண்ணுல மைய்யி’ என்ற பாடலின் மூலம் புகழ்பெற்ற தெம்மாங்குப் பாடகர், நடிகர் டி.கே.எஸ். நடராஜன் காலமானார். அவருக்கு வயது 87.
பாடல் தவிர்த்து ஏராளமான திரைப்படங்களிலும் நடராஜன் நடித்துள்ளார். ‘ரத்தபாசம்’, ‘நாடோடி’, ‘நீதிக்குத் தலைவணங்கு’, ‘பொன்னகரம்’, ‘தேன் கிண்ணம்’, ‘கண்காட்சி’, ‘பகடை பனிரெண்டு’, ‘ராணி தேனீ’, ‘ஆடு புலி ஆட்டம்’, ‘பட்டம் பறக்கட்டும்’, ‘மங்களவாத்தியம்’, ‘உதயகீதம்’, ‘ஆனந்தக் கண்ணீர்’ ,’ இதோ எந்தன் தெய்வம்’, ‘காதல் பரிசு’ உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட படங்களில் நடராஜன் நடித்துள்ளார்.
இந்நிலையில் இன்று அதிகாலை 6.30 மணியளவில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் டி.கே.எஸ். நடராஜன் காலமானார். அவரது இறுதிச் சடங்கு இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.