சென்னை:

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரபல பாடகர் மனோ டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியில் இணைந்துள்ளார்.

தமிழக அரசியல் கட்சிகள் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் வியூகங்கள் வகுத்து வெற்றிக்கனியை பறிப்பது குறித்து ஆலோசனைகளை தொடர்ந்து வருகிறது. இதற்காக  கூட்டணி, வேட்பாளர் தேர்வு என பிஸியாக இருந்து வரும் நிலையில், டிடிவி தினகரன் கட்சி எந்தவித ஆரவாரமுமின்றி அமைதியாக காணப்படுகிறது.

ஏற்கனவே திமுக, அதிமுக கூட்டணியை விமர்சித்து வரும் அமமக, தேர்தலில் தனித்து போட்டி யிடுவோம் என்று கூறி வருகிறது. ஆனால், 3வது அணி அமைக்க திரைமறைவு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.

டிடிவியுடன் வேல்முருகன் கட்சி உள்பட சில கட்சிகள் கூட்டணி சேர முன்வந்துள்ள நிலையில், தேமுதிகவையும் இழுக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், பிரபல பாடகர் மனோ, டிடிவி முன்னிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியில் இணைந்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.