ஜூன் 27 திங்கட்கிழமை அதிகாலையில் மிலன் செல்லும் ஒரு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) விமானம் சிங்கப்பூரில் அவசர தரையிறக்கம் செய்யும் போது தீப்பிடித்தது, ஆனால் விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் காயமின்றி தப்பினார்.
ர்கள்,” என்று SIA அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட விமானம் வேறு இடத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டு ஓடுபாதை சுத்தப்படுத்தும் நடவடிக்கை தீவிரமாக நடந்துகொண்டிருப்பதாக சாங்கி விமான நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.
பயணிகள் தங்கள் பயணத்தை ஒத்திவைக்க அல்லது மாற்று விமானத்தைத் தேர்ந்தெடுத்துச் செல்ல உரிமை வழங்கப்பட்டதாகத் திருமதி லீ சேனல் நியூஸ் ஏசியாவிடம் கூறினார். பறக்க வேண்டாம் என்று தேர்வு செய்வோர், SIA ஏற்பாடு செய்யும் ஹோட்டலில் தங்க வைக்கப்படுவர் எனவும், சிங்கப்பூரில் தங்கியுள்ளவர்கள் தங்கள் வீடு திரும்பலாம் என்வும் அவர்களுக்கு விமான நிறுவனம் அவர்களுடைய இரண்டு வழிகளின் பயணச் செலவைச் செலுத்தும் என்றும் அவர் கூறினார்.
திருமதி லீ, தனது விமானப் பயணத்தை ஒத்திவைத்து, வீட்டிற்கு போய் தனது குழந்தைகளைப் பார்க்கப் போவதாகவும் கூறினார். அவர் மேலும் SIA வின் இந்த முழு செயல்முறையைக் கையாளும் விதம் மிகவும் நிதானமாகவும் நன்றாகவும் இருந்ததாகவும் தெரிவித்தார்.
அதிகாரிகளின் விசாரணைகளில் ஒத்துழைப்பு தருவோம் என விமான நிறுவனம் கூறியுள்ளது.
SIA வின் ஒரே விபத்து, அக்டோபர் 31, 2000 அன்று சிங்கப்பூரிலிருந்து தைப்பே வழியாக லாஸ் ஏஞ்சல்ஸ் சென்ற விமானம், தவறான ஓடுபாதையிலிருந்து புறப்பட முயற்சித்து, பின்னர் தைவான் டேயுன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்த கட்டுமான உபகரணங்கள்மீது இடித்துப் பல பேர் உயிரிழக்க காரணமானது. அந்த விபத்தில் விமானத்தில் இருந்த 179 பயணிகளில் 83 பேர் கொல்லப்பட்டனர்.