ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலக வேண்டும் என்று  பிரிட்டிஷ் மக்கள் அளித்த தீர்ப்பை அடுத்து,  அந்நாட்டு  பிரதமர் டேவிட் கேமரன் பதவி விலகப் போவதாக அறிவித்திருக்கிறார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் தொடர்ந்து இருக்க வேண்டுமா, விலக வேண்டுமா என்பது குறித்த வாக்கெடுப்பு இன்று அந்நாட்டில் நடந்தது.
இதில் பிரிட்டன் மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலக வேண்டும் என்று வாக்களித்தனர்.
160624073650_david_cameron_resigns_624x415_getty_nocredit
பிரிட்டன் நாட்டில் உள்ள இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய பகுதிகள்  பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று வாக்களித்தன; லண்டன், ஸ்காட்லாந்து மற்றும் வட அயர்லாந்து ஆகியவை ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறக்கூடாது என்று வாக்களித்தன.
மொத்தத்தில் ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக வேண்டும் என்று  52  சதவிகிதம் பேர் வாக்களித்தனர். ஆகவே   பிரிட்டன் விலகுவது உறுதியாகிவிட்டது. முன்னதாக, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகக்கூடாது என்று அந்நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன் பிரச்சாரம் செய்து வந்தார். ஆனால் அவரது கருத்துக்கு எதிராக மக்கள் முடிவெடுத்திருக்கிறார்கள்.
இதையடுத்து பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக கேமரூன் அறிவித்துள்ளார்.
வாக்கெடுப்பு முடிவு வெளியான  பிறகு இன்று  தனது 10, டௌனிங் வீதி இல்லத்துக்கு வெளியே ஊடகவியலாளர்களிடம்  டேவிட் கேமரூன் பேசினார். அப்போது, வரும் அக்டோபரில் தான் பிரதமர் பதவியிலிருந்து விலகப் போவதாக அறிவித்தார்.