சிங்கப்பூர்: ஆன்லைனில் தவறான செய்திகளைப் பதிவிடுவதை குற்றம் என்று அறிவித்து, அவற்றை நீக்குவதற்கு அல்லது தடைசெய்வதற்கு, அரசுக்கு அதிகாரமளிக்கும் வகையிலான சட்டம், சிங்கப்பூரில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆன்லைன் செய்தி மோசடிகளை தடுப்பதற்கான இந்த சட்டம், 72-9 ஆகிய வாக்குகள் வித்தியாசத்தில், மே 8ம் தேதி இரவு நிறைவேற்றப்பட்டதாய் கூறப்படுகிறது.

இதன்மூலம் சிங்கப்பூருக்கு கேடு விளைவிக்கும் மற்றும் தேர்தலில் தாக்கம் உண்டாக்கும் என நம்பப்படும் செய்திகளை அகற்ற அல்லது தடைசெய்ய, சேவை வழங்குநர்களின் உதவி நாடப்படும்.

இந்த சட்டத்தின்படி, சம்பந்தப்பட்ட குற்றமிழைத்தவர்கள், 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், பெருந்தொகை அபராதமும் விதிக்கப்படுவார்கள்.

சிங்கப்பூர் அரசின் இந்தச் சட்டம், கருத்து சுதந்திரத்தை சுத்தமாக முடக்கும் செயல் எனவும், அரசின் எதேச்சதிகாரத்தை அதிகரிக்கும் செயல் எனவும் பரவலான கண்டனங்கள் எழுந்துள்ளன.