சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் தொடரின் காலிறுதியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து தோல்வியுற்று போட்டியில் இருந்து வெளியேறினார்.
சிங்கப்பூரில் வருடம் தோறும் பாட்மிண்டன் தொடர் நடக்கிறது. . இந்த ஆண்டுக்கான தற்போது நடக்கும் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் உலகின் ஐந்தாம் நிலை வீராங்கனையான இந்தியாவின் பி .வி.சிந்து, ஸ்பெயினின் கரோலினா மரின் ஆகியோர் மோதினர்.
ஆட்டத்தின் துவக்கம் முதல் சோபிக்காத ய சிந்து முதல் செட்டை 11-21 என்ற செட் கணக்கில் இழந்தார். இரண்டாவது செட்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறிய சிந்து, அந்த செட்டையும் 14-21 என இழந்தார்.
இறுதியில் பி .வி.சிந்து, ஸ்பெயினின் கரோலினா மரினிடம் தோல்வியடைந்தார். இதனால் தொடரில் இருந்தும் வெளியேறினார்.