சிங்கப்பூர்

சிங்கப்பூர் நகரில் உள்ள முஸ்தஃபா செண்டர், தெம்பனிஸ் கடை தொகுதிக்குச் சென்றோர் தனிமைப்படுத்திக் கொள்ள  அர்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிங்கப்பூரில் கொரோனா தொற்றால் பாதிப்பு அதிகமாகி வருகிறது. இங்குள்ள முஸ்தஃபா செண்டர் என்னும் வணிக வளாகம் மிகவும் பிரபலமானதாகும்  அத்துடன் சிங்கப்பூரில் உள்ள தெம்பனிஸ் கடை தொகுதி,  கொலாங் செராய் மார்கெட் ஆகிய இடங்களும் பலரும் வந்து செல்லும் இடங்களாகும்.

இந்நிலையில் சிங்கப்பூரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிலர் இந்த இடங்களுக்குச் சென்று வந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.  இவர்கள் அனைவரும் அடுத்தவருக்கு கிருமியைப் பரப்ப்க்கூடிய நிலையில் இருந்துள்ளனர்.  இந்த பகுதிகளில் அவர்கள் சுமார் அரை மணி நேரத்துக்கும் மேல் இருந்துள்ளனர்.

எனவே அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த மே 26 ஆம் தேதி அன்று கொலாங் செராங் மார்க்கெட், ஜூன் 2 ஆம் தேதி அன்று தெம்பனிஸ் கடைத் தொகுதி மற்றும் ஜூன் 4 அன்று முஸ்தஃபா செண்டர் ஆகிய இடங்களுக்குச் சென்றிருந்தோர் உடனடியாக தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளவும். இன்னும் 14 நாட்களுக்கு தங்கள் உடல்நிலையைக் கவனமாக கண்காணிக்கவும்” என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.