சிங்கப்பூர்:
மூகவலைதளங்களில் பரவும் செய்திகளின் உண்மைத்தன்மையை அறிந்துகொள்ள தனி இணையதளத்தை சிங்கப்பூர் அரசு துவங்கியுள்ளது.
அறிவியல் முன்னேற்றம் ஏற்பட்டு நவீன வசதிகள் பெருகப் பெருக, வதந்திகளும் பெருகி வருகிறது. வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் எந்தக் கட்டுப்பாடும் இன்றி யார் வேண்டுமானாலும் செய்திகளைப் பகிர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நன்மைகள் இருந்தாலும், ஆபத்துகளும் ஏற்படுகிறது.  உறுதிப்படுத்தப்படாத செய்திகளை பலரும் பகிர்கிறார்கள். இதனால் சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுகிறது.
download (5)
இந்த ஆபத்தைப் போக்க, சிங்கப்பூர் அரசு புதிய முயற்சியை எடுத்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செய்திகளின் உண்மைத் தன்மையை உறுதி செய்துகொள்ளும் வகையில்  இணையதளம் ஒன்றை சிங்கப்பூர் அரசு துவங்கி உள்ளது. இதில் உறுதிப்படுத்தப்பட்ட ஆதாரபூர்வான செய்திகள் பகிரப்படும். இதனால் வீண் வதந்திகள் ஏ்ற்பட்டு சமூகத்தில் பதட்டம் உருவாவதை தடுக்க முடிகிறது.
இதே போல தமிழக அரசும், ஒரு அதிகாரபூர்வ இணையதளத்தை துவக்கினால், வீண் வதந்திகளையும் அதனால் ஏற்படும் பதட்டங்களையும் தவிர்க்கலாம்.
தமிழக அரசு இதற்கு நடவடிக்கை எடுக்குமா?