சிங்கப்பூர்: இலங்கையில் இருந்து தப்பிச்சென்று, சிங்கப்பூரில் தங்கியுள்ள முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு, சிங்கப்பூர் மேலும் 14நாள் விசாவை நீடித்து அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி ஆகஸ்டு 11ந்தி வரை அவர் சிங்கப்பூரில் தங்கி இருக்க முடியும் என்று தெரிவித்து உள்ளது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் கொதித்தெழுந்த மக்கள், நடத்திய போராட்டம் காரணமாக, கோத்தபய ராஜபக்சே அங்கிருந்து தப்பி ஓடி, மாலத்தீவில் கடந்த 13-ந்தேதி தஞ்சமடைந்தார். ஆனால், அங்குள்ள மக்கள் அவருக்கு எதிராக போராட்டத்தில் குதித்தால், அவர் அங்கிருந்து வெளியேறி சிங்கப்பூருக்கு சென்றார். அங்கும் போராட்டம் எழுந்ததால், கோத்தபய டூரிஸ்ட் விசாவில் வந்துள்ளதாகவும், ராஜபக்சே தனிப்பட்ட முறையில் வந்துள்ளார். அவர் அடைக்கலம் கேட்கவில்லை என்றும் சிங்கப்பூர் அரசு விளக்கம் அளித்தது.
இந்த நிலையில் கோத்தபய சிங்கப்பூரில் தங்கிருப்பதற்கான 14 நாள் அனுமதி நாளையுடன் முடிவுக்கு வரும் நிலையில், தற்போது மேலும் 14 நாள் விசாவை நீட்டித்து சிங்கப்பூர் அரசு அனுமதி வழங்கி இருப்பதாக அங்கிருந்து வெளிவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக அங்குள்ள ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தியில், “கோத்தபய ராஜபக்சேவுக்கு சிங்கப்பூர் அரசு புதிய விசா வழங்கி உள்ளது. அவர் சிங்கப்பூரில் தங்கி இருப்பதற்கான குறுகிய கால அனுமதிச்சீட்டு மேலும் 14 நாட்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆகஸ்டு 11-ந்தேதி வரை அவர் சிங்கப்பூரில் தங்கி இருக்க முடியும் என்று தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பேசிய இலங்கை போக்குவரத்து மந்திரியும், மந்திரிசபை செய்தித் தொடர்பாளருமான பந்துல குணவர்த்தனா, கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு தப்பி னசொறதாகவோ அல்லது மறைந்து வாழ்வதாகவோ நாங்கள் கருதவில்லை. அவர் சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு திரும்பி வருவார் என்று தெரிவித்துள்ளார்.