சிங்கப்பூர்: சிங்கப்பூரில்24 மணி நேரத்தில், 481 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட, ஒட்டு மொத்த பாதிப்பு 50000ஐ கடந்துள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், 200க்கும் அதிகமான நாடுளில் பரவி இருக்கிறது. அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் வேகமாக பரவி கடுமையாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சிங்கப்பூரில் 24 மணி நேரத்தில், 481 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 5 பேருக்கு மட்டுமே சமுதாய பரவல் ஏற்பட்டுள்ளது. எஞ்சிய 476 பேரும், வெளிநாடுகளிலிருந்து வந்து, குடியிருப்புகளில் தங்கி பணிபுரிபவர்கள்.
இதனையடுத்து, சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50,369 ஆக உயர்ந்து உள்ளது. 27 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். ஒட்டு மொத்தமாக, 45,352 பேர் இதுவரை குணமடைந்துள்ளதாகஅ அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
Patrikai.com official YouTube Channel