இக்கண்டுபிடிப்புகள் மருத்துவமனை பராமரிப்பு மற்றும் மூச்சுத் திணறல் உள்ள நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை செய்ய மருத்துவர்களுக்கு முன்கூட்டிய எச்சரிக்கை கொடுக்கக்கூடும்.
இதுவரையிலான ஆய்வுகளின்படி, கோவிட் -19 இன் அறிகுறிகள் ஆறு வெவ்வேறு வகைபாடுகளாக வகைப்படுத்தப்படலாம் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த வகைப்பாடு ஒரு கோவிட்-19நோயாளிக்கு வென்டிலேட்டர் அல்லது பிற சுவாசக் கருவிகளும் உதவித் தேவையா என கண்டறிய உதவுவதாக அவர்கள் விளக்கமளித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்புகள் மருத்துவ பராமரிப்பாளர்களுக்கு மருத்துவமனை பராமரிப்பு மற்றும் சுவாச உதவிக்கான தேவை குறித்து பல நாட்கள் முன்கூட்டிய எச்சரிக்கையை அளிக்கக்கூடும் என்று குழு கூறுகிறது. ஆனால் இது தீவிரமாக நோய்வாய்ப்படும் அபாயத்தில் உள்ள நோயாளிகளுக்கு சிறப்பாக உதவக்கூடும்.  அதாவது ஆக்ஸிஜன் மீட்டர் அல்லது செவிலியர் தேவை போன்றவற்றைச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு அளிக்கப்படலாம் அல்லது மருத்துவமனை உதவி வழங்கப்படலாம். மருத்துவமனை செல்ல வேண்டிய நிலை உருவாக சராசரியாக 13 நாட்கள் வரை ஆகிறது.

“நோயாளிகள் உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் மருத்தவமனைக்கு வருவதை நிறுத்த செய்யும் முயற்சிகள் நோயாளிகளின் உயிர்வாழும் வாய்ப்புகளை அதிகரிக்கும். மேலும், தேவையில்லாமல் மருத்துவமனை படுக்கைகள் நோயாளிகளினால் ஆக்கிரமிக்கப்படுவதும் தடுக்கப்படும்,” என்று லண்டனின் கிங்ஸ் கல்லூரியின் பேராசிரியர் டிம் ஸ்பெக்டர் கூறினார். MedRxiv இல் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு இன்னும் மதிப்பாய்வு செய்யப்படவில்லை. மேலும், இது இவர்களின் மொபைல் செயலியில் இடப்பட்ட டேட்டாவை அடிப்படையாகக் கொண்டது. இந்த செயலி 4 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. கோவிட் -19 க்கு பாசிடிவ் முடிவுகளைப் பெற்று உறுதி செய்யப்பட சுமார் 1,653 பயனர்களிடமிருந்து டேட்டா பெறப்பட்டது. மேலும் இந்த பயனர்கள் அவர்களின் உடல்நிலை, அறிகுறிகள் குறித்து தொடர்ச்சியாக தகவல்களை பதிவேற்றி வந்தனர்.  ஒட்டுமொத்தமாக, இந்த பயனர்களில் 383 பேர் மருத்துவமனைக்கு குறைந்தபட்சம் ஒருமுறையேனும் சென்று வந்தவர்கள் மற்றும் 107 பேருக்கு கூடுதல் ஆக்ஸிஜன் அல்லது சுவாச கருவிகளின் உதவி தேவைப்பட்டிருந்தது.

கண்காணிப்பில் வைக்கப்பட்ட 14 குழுக்களில் காணப்பட்ட அறிகுறிகளைக் கண்காணித்து வகைப்படுத்த இயந்திர கற்றல் வழிமுறைகள் பயன்படுத்தப்பட்டது. இது ஒருவகையான செயற்கை நுண்ணறிவு ஆகும். அறிகுறிகளின் வகைபாடு, அவை எப்போது வெளிப்பட்டன மற்றும் பங்கேற்பாளர்களின் நோயின் முதல் 14 நாட்களுக்குள் அறிகுறிகள் வெளிப்பட்ட மொத்த கால அளவு ஆகியவற்றின் அடிப்படையில் ஆறு வெவ்வேறு அடிப்படை வகைபாடுகளை இந்த முடிவுகள் பரிந்துரைக்கின்றன. “இந்த குழுக்களுக்கும், விளைவுகளுக்கும் இடையில் [பங்கேற்பாளர்களின்] தேவைப்பட்ட சுவாச உதவியின்  அடிப்படையில் ஒரு தெளிவான படிப்படியான பரவல் இருப்பதை நாங்கள் கண்டோம்,” என்று லண்டனின் கிங்ஸ் கல்லூரியின் மருத்துவ மூத்த எழுத்தாளர் டாக்டர் கிளாரி ஸ்டீவ்ஸ் கூறினார். சில குழுக்களில் வயது அல்லது முன்பே இருக்கும் சில மருத்துவ நிலைமைகள் அறிகளுக்கிடையே மிகவும் பொதுவானவையாக இருந்தன.
மேற்குறிப்பிடப்பட்ட ஆறு குழுக்களாவன:

  • குழு 1: தொடர்ச்சியான இருமல், தசை வலியுடன் கூடிய மேற்புற சுவாசக்குழாய் அறிகுறிகள். இந்த குழுவில் சுமார் 1.5% நோயாளிகளுக்கு சுவாச உதவி தேவைப்பட்டது, 16% பேர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறை மருத்துவமனை உதவியைப் பெற்றனர். 462 பங்கேற்பாளர்களைக் கொண்டு சோதிக்கப்பட்ட பொதுவான குழு.
  • குழு 2: முக்கியமாக உணவுக் கட்டுப்பாடுகளைப் பேண வேண்டிய அளவுக்கான, அடிக்கடி தோன்றும் மேல் சுவாசக்குழாய் அறிகுறிகள். இந்த குழுவில் உள்ள 4% பேருக்கு நோயாளிகளுக்கு சுவாச உதவி தேவைப்படுகிறது. 17.5% நோயாளிகள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறை மருத்துவமனை உதவியை நாடினர்.
  • குழு 3: வேறு சில அறிகுறிகளுடன் கூடிய வயிற்றுப்போக்கு போன்ற இரைப்பை, குடல் அறிகுறிகள். இந்த குழுவில் 3.7% நோயாளிகளுக்கு நோயின் பின்பகுதி காலத்தில் சுவாச உதவி தேவைப்பட்டாலும், கிட்டத்தட்ட 24% பேர் குறைந்தபட்சம் ஒரு முறையேனும் மருத்துவமனைக்கு வருகை தந்தனர்.
  • குழு 4: கடுமையான சோர்வு, தொடர்ச்சியான மார்பு வலி மற்றும் இருமலின் ஆரம்ப அறிகுறிகள். இந்த குழுவில் உள்ள நோயாளிகளில் 8.6% பேருக்கு சுவாச உதவி தேவைப்படுகிறது, 6% பேர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றனர்.
  • குழு 5: குழப்பம், தவிர்க்கப்பட்ட உணவு மற்றும் கடுமையான சோர்வு. இந்த குழுவில் உள்ள நோயாளிகளுக்கு 9.9% பேருக்கு சுவாச உதவி தேவைப்படுகிறது. 24.6% பேர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறை மருத்துவமனைக்கு உதவி பெற்றவர்கள்.
  • குழு 6: மூச்சுத் திணறல், மார்பு வலி, குழப்பம், சோர்வு மற்றும் இரைப்பை குடல் அறிகுறிகள் உள்ளிட்ட சுவாசக் கோளாறு குறிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் கிட்டத்தட்ட 20% பேருக்கு சுவாச உதவி தேவை. 45.5% பேர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் மருத்துவமனை உதவி பெற்றனர். ஆனால் இது 167 பங்கேற்பாளர்களைப் பாதிக்கும் மிகக் குறைவான பொதுவான அறிகுறிகொண்ட குழு இதுவாகும்.


முதல் இரண்டு குழுக்கள் கோவிட் -19 இன் “மிதமான” வடிவங்களாகத் தெரிகிறது என்று ஆய்வாளர்கள் கணித்தனர். 1,047 வெவ்வேறு செயலி பயனர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களை ஆய்ந்ததில், தலைவலி, வாசனை மற்றும் சுவை இழப்பு ஆகியவை கூடுதலாக பொதுவாக இருந்தது தெரிய வந்தாது. வாசனை மற்றும் சுவை இழப்பு மட்டும் சற்றே நீண்ட நாட்களுக்கு நீடித்தது. இவ்வாறு அறிகுறிகளைத் தொடர்ந்து கண்காணித்து வந்ததின் மூலம் நோயாளிகளின் பாதிப்புகளை முன்கூட்டியே யூகித்து கணிக்க முடிந்ததாக மருத்துவர்கள் கோரியுள்ளனர்.

இதைப்பற்றி ஸ்பெக்டர் கூறும்போது, “ஒரு மருத்துவ ஆலோசனை செயலியில் அனைத்து அறிகுறிகளையும் பதிவு செய்வது, நோயாளிகளின் மருத்துவ தேவைகளைக் கணிக்க மிகவும் உதவியாக இருக்கும். மேலும் ஒரு உயிரைக் காப்பாற்ற முடியும்.” நோயாளியின் சிறப்பியல்புகளான வயது, பாலினம் மற்றும் முன்பே இருக்கும் மருத்துவ நிலைமைகள் ஆகியவற்றுடன், அறிக்கையிடப்பட்ட  முதல் ஐந்து நாட்களின் அறிகுறிகளின் அடிப்படையில், ஒரு நோயாளிக்கு சுவாச உதவித் தேவையா என்பதை 79% வரை சரியாகக் கணிக்க முடியும். அறிகுறிகளைப் பற்றிய தெளிவுகள் இல்லாத போது நோயாளியின் குணாதிசயங்களை மட்டும் பயன்படுத்தி மேற்கொண்ட கணிக்கும் வாய்ப்பு 70% க்கும் குறைவாகவே இருந்தது; குறிப்பாக சொல்வதானால் வாய்ப்பு 50% வாய்ப்பு மட்டுமே இருந்தது.