பெங்களூர் கே.ஜி.ஹள்ளி பகுதியில் வெளிநாட்டு வாலிபர் போதைப்பொருட்களை விற்பனை செய்ய முயற்சிப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அங்கு விரைந்த போலீசார் நைஜீரியாவை சேர்ந்த செக்வூம் மால்வின் (வயது 45) என்பவரை கைது செய்தார்கள்.

மால்வின் தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம்-2 படத்தில் நடித்திருந்தார். அப்படத்திலும் போதைப் பொருள் கடத்தி வருபவராக நடித்திருந்தார் மால்வின். அவரை சூர்யா கைது செய்வது போன்ற காட்சியும் அப்படத்தில் இடம்பெற்றிருந்தது.

கைதான மால்வினிடம் இருந்து ரூ.8 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் மீது கே.ஜி.ஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

[youtube-feed feed=1]