ஐதராபாத்: டென்மார்க்கில் நடைபெறவுள்ள தாமஸ் உபர் கோப்பை பாட்மின்டன் தொடரிலிருந்து விலகியுள்ளார் உலக சாம்பியன் சிந்து.
அடுத்தமாதம்(அக்டோபர்) 3ம் தேதி முதல் 11ம் தேதிவரை, டென்மார்க்கில் நடைபெறவுள்ளது தாமஸ் உபர் கோப்பை பாட்மின்டன்.
ஆனால், தனிப்பட்ட காரணங்களுக்காக இத்தொடரிலிருந்து, இந்திய நட்சத்திரமும், உலக சாம்பியனுமான சிந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், டென்மார்க் ஓபன் மற்றும் டென்மார்க் மாஸ்டர்ஸ் தொடர்களிலும் சிந்து பங்கேற்பது சந்தேகமே என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து, இந்திய பாட்மின்டன் சங்கத்திடம் சிந்து தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.