ரியோ டி ஜெனீரோ :
ரியோ ஒலிம்பிக் பாட்மின்டன் அரையிறுதியில் வெற்றி பெற்ற இந்திய வீராங்கனை பி.வி. சிந்துவிற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி  மற்றும் பலர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்..
leaders
இதுதவிர சமூகவலைதளங்களிலும் சிந்துவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி: சிறப்பாக விளையாடிய சிந்துவுக்கு எனது வாழ்த்துகள். பைனலில் வெற்றி பெற வாழ்த்துகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி:   சிந்துவின் வெற்றி மூலம் இந்தியாவிற்கு பெருமை கிடைத்துள்ளது. பைனலில் சிந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும்  காங்கிரஸ்  தலைவர் சோனியா, காங்., துணை தலைவர் ராகுல்,  பா.ஜ., தலைவர் அமித்ஷா, மத்திய  அமைச்சர் சுஷ்மா சுவராஜ்,  அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், டில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் , கிரிக்கெட் வீரர் சச்சின், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பிரபல நடிகர் அமிதாப் பச்சன் , நடிகர் ஆமிர்கான், துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா, ஆகியோரும் பி.வி.சிந்துவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தை சேர்ந்த  தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ரியோ ஒலிம்பிக் பாட்மின்டன் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்ற சிந்து அவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்றும், தங்கப்பதக்கம் வென்று நம் தாய்நாட்டிற்கு பெருமை தேடி தரவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும்  சிந்து தங்கம் வெல்ல வாழ்த்துத் தெரிவித்து உள்ளனர்.