டில்லி:
தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தி உள்ள சிவிஜில் மொபைல் செயலி மூலம் கடந்த 18 நாட்களில் 23ஆயிரம் புகார்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், புகாரின்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து எந்த விவரங்களும் வெளியாகவில்லை.
தேர்தல் முறைகேடுகள் குறித்து தெரிவிக்க, இந்திய தேர்தல் ஆணையம் சிவிஜில் மொபைல் செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது.
கடந்த 10ந்தேதி முதல் சிவிஜில் செயலி மூலம் 23ஆயிரம் புகார்கள் வந்துள்ளதாகவும், இது குறித்து ஆய்வு செய்யப்பட்டதில் 60 சதவிகித புகார்கள், உண்மையாது என்பது தெரியவந்துள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் 7கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதி முறை கள் நாடு முழுவதும் அமலில் உள்ளன. தேர்தல் நேரங்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதிவிஜில் (C-Vigil) என்கிற செயலியையும் தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தி யுள்ளது. மக்களும் இதன் மூலம் தேர்தல் முறைகேடுகளை கண்காணித்து தேர்தல் ஆணை யத்துக்கு புகார் அளிக்கலாம் என்று அறிவித்து உள்ளது. சிவிஜில் மூலம் அளிக்கப்படும் புகாரின் மீது 100 நிமிடங்களில் நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து பல்வேறு விழிப்புணர்களை நிகழ்ச்சிகளை தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது.
இந்த நிலையில், கடந்த 10ந்தேதி முதல் இதுவரை சிவிஜில் செயலி மூலம் 23ஆயிரம் புகார்கள் வந்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. இந்த புகார்களில் 60 சதவிகிதம் உண்மைதான் என்றும் கூறி உள்ளது.
ஆனால், இந்த புகாரின்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து தெரிவிக்கவில்லை. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.