வெயில் காலம் வந்து விட்டாலே அழையா விருந்தாளியாக தோல் சம்பந்தமான நோய்களும் வரத்தொடங்கும். இந்த வெயில் காலத்தில் பெரியவர் முதல் சின்ன குழந்தைகள் வரை பாடாய் படுத்தும், தோல் பிரச்னை என்றால் அது வியர்க்குருதான். அதற்கான தீர்வுகளை வீட்டில் இருக்கும் பொருட்கள் மூலம் எப்படி குணப்படுத்தலாம் என்பதைப் பார்க்கலாம்.
- சந்தனத்தை அரைத்து எலுமிச்சம் பழச்சாறுடன் கலந்து உடலில் தடவி வந்தால் வேர்குரு படிப்படியாகக் குறையும்.
- வெங்காயத்தை சாறு எடுத்து வியர்குருவின் மீது பூசி வந்தால் வியர்க்குரு குணமாகும்.
- மூல்தானி மெட்டி ஒரு சிறந்த வியர்க்குரு விரட்டியாகவும் வீட்டு மருதாகவும் உள்ளது. நான்கு டேபிள் ஸ்பூன் மூல்தானி மெட்டி, இரண்டு டேபிள் ஸ்பூன் பன்னீர், ஆகியவற்றை ஒன்றாக கலந்து பேஸ்ட் போல் எடுத்துக் கொள்ளவும். பிறகு வியர்க்குருவினால் பாதிக்கப்பட்ட பகுதியில், இந்த பேஸ்டை தடவி 30 நிமிடம் காய வைத்து, பின் குளிர்ந்த நீரில் சுத்தப் படுத்தவும் இவ்வாறு செய்வதன் மூலம் வியர்க்குரு மறையும்.
- கலப்படம் இல்லாத சந்தனப் பவுடர் மற்றும் சுத்தமான மல்லித் தூள் ஆகியவற்றை தலா இரண்டு டீஸ்பூன் எடுத்துக் கொண்டு, அதில் மூன்று டேபிள் ஸ்பூன் பன்னீர் கலந்து கொள்ளவும். பின் அதனை வியர்க்குரு இருக்கும் இடத்தில் பூசி உலர விட்டு, குளிர்ந்த நீரால் குளிக்க இதுவும் நல்ல பலன் கொடுக்கும்.
- வியர்க்குரு அதிகமாக இருக்கும் பகுதியில் அரிப்பு அதிகமாக இருக்கும். சொரிந்து விட்டால் ரத்தம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதனால் பஞ்சு அல்லது பருத்தித் துணியைக் குளிர்ந்த நீரில் நனைத்து, அதனை வியர்க்குரு உள்ள இடங்களின் மீது போட்டு மூடிவிடலாம். பஞ்சு அல்லது துணியிலுள்ள ஈரம் முழுவதுமாக உறிஞ்சும் வரை வைத்து விட்டு எடுக்கவும். இந்த மாதிரி ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை செய்யலாம்.