வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடித்து வரும் திரைப்படம் மாநாடு. இந்த படத்தை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் ப்ரோடுக்ஷன் தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரவீன் KL எடிட்டிங் செய்யவுள்ளார்.

புதுச்சேரியில் நடக்கும் மாநாடு படப்பிடிப்பில் சிம்பு கலந்து கொண்டுள்ளார். முறையான பாதுகாப்புடன் படப்பிடிப்பை நடத்தி வருகிறது படக்குழு.

இந்நிலையில் பாண்டிச்சேரியில் உள்ள பஞ்சவதி ஆஞ்சநேயர் கோவிலில் தரிசனம் செய்துள்ளார் சிலம்பரசன். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஈஸ்வரன் படப்பிடிப்பின் போதும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கும், திருமதி ஏழுமலையான் கோவிலுக்கும் சிலம்பரசன் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

[youtube-feed feed=1]