தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் சிலம்பரசன், மாநாடு படத்தை முடித்த கையோடு கௌதம் மேனன் இயக்கத்தில் ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ படத்தில் நடிக்க ரெடியாகிவிட்டார்.

வரிசையாக படங்களில் பிசியாகவுள்ள சிம்பு, தற்போது, கர்நாடகாவில் உள்ள முருதீசுவரர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.

அங்குள்ள பிரம்மாண்ட சிவன் சிலை முன்பு சிம்பு, சாமி தரிசனம் செய்தவாறு இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சாமியை கும்பிடும்போது எதுக்கு கூலிங் க்ளாஸ் என்ட்ரி கேட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.