ரசிகர்கள் விரும்பும் நாயகனாக உருவெடுத்துள்ளார் நடிகர் சிம்பு . தனது உடல் எடையை குறைத்து பழைய சிம்புவாக வந்து நின்றதே ரசிகர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் செய்தியாக இருந்தது.
சிம்பு நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் ஒருபுறம், சிம்புவின் போட்டோஷூட்டுகள் மறுபுறம் என ரசிகர்களை ஈர்த்து வருகிறது .
ஈஸ்வரன் படத்தை முடித்த கையோடு வெங்கட்பிரபு இயக்கும் மாநாடு படத்தில் களமிறங்கினார் சிம்பு. இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் நடிகர் சிம்பு சபரிமலைக்கு மாலை அணிந்தார். இந்த நிலையில் தற்போது அவர் இருமுடி கட்டிக் கொண்டு சபரிமலைக்கு கிளம்பியுள்ளார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.