சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’படம் உருவாகவுள்ளதாக தகவல்கள் வந்தன . இதில் நடிகர் சிம்பு நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் படக்குழு இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக சிம்பு படத்தில் இருந்து நீக்கப்பட்டதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தார்.
ஆனால் சிம்புவின் அம்மா உஷா ராஜேந்தர், சிம்பு படப்பிடிப்பில் கலந்துக்கொள்ள தயராகவே இருந்தார். சுரேஷ் காமாட்சிக்கு தான் பைனான்ஸ் பிரச்சினை என கூறினார்.
இதற்கிடையே, தயாரிப்பாளர் சுரேஷ் காமட்சி சிம்பு மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து நேற்று தயாரிப்பாளர் சங்கத்தில் பஞ்சாயத்து நடைபெற்றிருக்கிறது.
சிம்பு தரப்பில் அவரது அம்மா உஷா ராஜேந்திர் பஞ்சாயத்தில் பேசியதோடு, இறுதியாக ‘மாநாடு’ படத்தில் சிம்பு நடிப்பார் என்றும், ஆனால் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தான் படப்பிடிப்பில் இருப்பார், என்றும் தெரிவித்துள்ளார். இதற்கு சுரேஷ் காமாட்சியும் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.