சுசீந்திரன் இயக்கி வரும் ஈஸ்வரன் படத்தில் நடித்து வருகிறார் சிம்பு.
ஈஸ்வரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது .
இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்து வருகிறார். படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்தது என்பதும் தெரிந்ததே
தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கி உள்ள நிலையில் ஈஸ்வரன் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அனைவருக்கும் தீபாவளி பரிசு சிம்பு வழங்கியுள்ளார் .
ஈஸ்வரன் படத்தில் பணியாற்றிய 400 பேருக்கு ஒரு கிராம் தங்கம், வேட்டி சேலை மற்றும் இனிப்புகள் வழங்கி உள்ளார் என்றும் துணை நடிகர்களும் துணை நடிகைகள் 200 பேருக்கு வேட்டி சேலை இனிப்பு வழங்கியுள்ளார் .