
ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் மாதவன், அனுஷ்கா, அஞ்சலி, ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் ‘சைலன்ஸ்’.
கோனா வெங்கட் மற்றும் விஸ்வ பிரசாத் இருவரும் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் அக்டோபர் 2-ம் தேதி வெளியாகிறது.
ஏற்கனவே சைலன்ஸ் படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் ட்ரெய்லர் வெளிவந்துள்ளது .
அனுஷ்கா வாய்பேச முடியாத மற்றும் காது கேட்க முடியாத பெண்ணாக நடித்து இருக்கிறார் என்பது ட்ரெய்லர் பார்க்கும் போதே புரிகிறது. ஒரு பாழடைந்த வீட்டுக்குள் ஒரு ஓவியத்தை தேடி அனுஷ்கா மற்றும் மாதவன் இருவரும் செல்கிறார்கள். உங்களுக்கு தேவையான josephine wood painting இந்த வீட்ல தான் இருக்கா என அனுஷ்காவிடம் மாதவன்கேட்கிறார்,
அதன் பின் மாதவன் ஒரு arenaவில் வயலின் போன்ற Cello என்ற இசை கருவியை வாசிக்கிறார். காது கேட்காத அனுஷ்காவிற்கு அவர் இதை சொல்லிக்கொடுக்கிறார். அதன் பின் அனுஷ்காவின் நெருங்கிய தோழி சோனாலி கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்துகிறார்கள். அர்ஜுன் ரெட்டி புகழ் ஷாலினி பாண்டே தான் நடித்து இருக்கிறார். நிச்சயதார்த்தம் ஆன இரண்டாவது நாளே சோனாலி காணாமல் போய்விடுகிறார் என காட்டப்படுகிறது.
மேலும் அனுஷ்கா தான் இந்த சம்பவத்திற்கு முக்கிய சாட்சி என போலிஸ் அதிகாரி சொல்கிறார். அதனால் அந்த வீட்டில் நடத்த சம்பவம் தான் இந்த படத்தின் கதைக்கு முக்கிய புள்ளியாக இருக்கும் என தெரிகிறது.
[youtube-feed feed=1]