ஜெனிவா:
மனித உரிமை ஆணைய கூட்டத்தில் பங்கேற்க சென்றுள்ள வைகோ அங்கு சாலையோரம் சிலம்பம் சுற்றிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஜெனிவா நகரில் அமைந்துள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைமையகத்தில், மனித உரிமை ஆணையத்தின் 36 வது கூட்டம் செப்டம்பர் 11ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடை பெற்றது.
இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட வைகோ ஈழத்தமிழர்களின் குறித்து தொடர்ந்து பேசினார். இதனால் சில சிங்களர்கள் அவரை சூழ்ந்துகொண்டு தாக்க முயற்சித்தனர். இதுகுறித்து ஐ.நா.வில் புகார் அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து வைகோவுக்கு ஐ.நா. சார்பில் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
மேலும் ஜெனிவா நகர வீதிகளில் கூடாரம் அமைத்து இலங்கை படுகொலை பற்றிய புகைப்படங்கள் கண்காட்சியும் நடத்தி வருகிறார். அந்த கூடாரம் அகற்றும்போது, அங்கிருந்த ஒரு கம்பை எடுத்து சிலம்பம் சுற்றினார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.