
புதுடெல்லி: இந்தியாவுடன் இணைக்கப்பட்டு 45 ஆண்டுகள் ஆகிவிட்ட பின்னரும்கூட, மத்திய அரசின் ஆவணங்களில் சிக்கிம் குறித்த விபரங்கள் திருப்படாமல் இருக்கும் விபரம் இப்போது வெளியாகியுள்ளது.
சமீபத்தில் டெல்லி மாநில அரசின் சார்பில் வெளியிடப்பட்ட உள்நாட்டுப் பாதுகாப்பு தன்னார்வலர்கள் தொடர்பான விளம்பரத்தில், இந்தியாவின் 22வது மாநிலமாக, கடந்த 1975ம் ஆண்டு இணைந்த சிக்கிமை, நேபாளம் மற்றும் பூடான் வரிசையில் தனி நாடு என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. மத்திய அரசின் ஆவணத்தை அப்படியே பின்பற்றிய சம்பந்தப்பட்ட அதிகாரியை, டெல்லி துணைநிலை ஆளுநர் சஸ்பென்ட் செய்தார்.
இந்நிலையில், மத்திய அரசினுடைய “உள்நாட்டுப் பாதுகாப்பு ஒழுங்குமுறைகள் 1968” தொடர்பான ஆவணங்களில் சிலவும், சிக்கிமை தனிநாடு என்று குறிப்பிடுவனவாக உள்ளன. அவை இன்னும் திருத்தப்படவே இல்லை என்ற விபரம் வெளியாகியுள்ளது. இது அதிர்ச்சியை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது.
Patrikai.com official YouTube Channel