பஞ்சாப் மாநிலத்தில் உள்ள காலிப் ரன் சிங் வால் என்ற கிராமம் சீக்கியர்களும், இந்து க்களும் அதிகம் நிறைந்த பகுதியாகும். இங்கு முஸ்லிம்களும் வசிக்கின்றனர். தற்போது ரம்ஜான் தொடங்கவுள்ளது. இதற்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே சீக்கியர்களும், இந்து க்களும் இணைந்து ஒரு மசூதியை இங்கு கட்டிக் கொடுத்துள்ளனர்.
இதற்கு முன்பு இங்குள்ள முஸ்லிம்கள் தொழுகை நடத்த அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று வந்தனர். அந்த கிராமத்தை சேர்ந்த லியாகத் அலில் என்பவர் கூறுகையில், ‘‘எங்களது நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியுள்ளது. இந்த அழகிய ஹஜ்ரத் அபு பக்கர் பள்ளிவாசல் எங்களுக்கு கிடைத்த ரம்ஜான் பரிசாகும்’’ என்றார்.
இந்த கிராமத்தில் மொத்தம் உள்ள ஆயிரத்து 300 பேர் கொண்ட மக்கள் தொகையில், 700 சீக்கியர்கள், 200 இந்துக்கள், 150 முஸ்லிம்கள் உள்ளனர். இங்குள்ள முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் பிரிவினைக்கு பிறகு குடியேறியவர்கள்.
பஞ்சாப் ஷாகி இமாம் மவுலானா ஹபீப் உர் ரஹ்மான் சானி லுதியான்வி கூறுகையில், ‘‘அ ந்த கிராமத்தினரின் இந்த செயல் சகோதரத்துவத்திற்கான சிறந்த முன் உதாரணம £கும். நீண்ட நாட்களாக உள்ளூர் முஸ்லிம்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. சொந்த மசூதியில் தொழுகை நடத்த முடியாத நிலை இருந்து வந்தது’’ என்றார்.
இந்த பள்ளிவாசல் கட்ட 1998ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், கடந்த ஆண்டு தான் கிராம மக்கள் உதவியுடன் கட்டுமான பணி தொடங்கியது. அந்த கிர £மத்தை சேர்ந்த சர்பஞ்ச் ஜக்தீப் கவுர் கூறுகையில்,‘‘மத நல்லிணக்கத்திற்கு இந்த கிராமம் எடுத்துக்காட்டாக விளங்குகிறது. மேலும், கிராம மக்களின் ஒத்துழைப்புடன் ஒரு கோவில் கட்டும் பணியும் நடந்து வருகிறது. மேலும், இங்கு ஒரு நானாஸ்கர் குருத்வாராவும் உள்ளது. அனைத்து மத நம்பிக்கையாளர்களும் இங்கு சென்று மரியாதை செலுத்தும் நிலை உள்ளது’’ என்றார்.
ஜஸ்விந்தர் குமார் என்பவர் கூறுகையில்,‘‘எங்களது கிராமத்தில் ஒரு மத வன்முறை சம்பவம் கூட நடந்தது கிடையாது. மதத்தின் பெயரால் சண்டை போடுபவர்களுக்கு ஒன்று மட்டும சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அவரவர் நம்பிக்கையுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். இதற்கு எங்களது கிராமம் ஒரு முன்னுதாரணம். பலதரப்பட்ட மதத்தினர் மற்றவர்கள் மதத்தையும் மதித்து இங்கு இணைந்து அமைதியான முறையில் பணியாற்றி வருகின்றனர்’’ என்றார்.