சிதி: மத்தியப் பிரதேச மாநிலத்தில் பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலியானோரின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது.

சிதி மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்தின் பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
தற்போது பலியானவர்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது. இது குறித்து பேசிய சிதி மாவட்ட காண்காணிப்பாளர், பலி எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 42 சடலங்கள் மீட்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றார். முன்னதாக விபத்தில் சிக்கியவர்களில் 7 பேரை மீட்புக் குழுவினர் உயிருடன் மீட்டனர்.
Patrikai.com official YouTube Channel