சூர்யா பிலிம் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் சார்பாக திரு.மகேஷ்வரன் நந்தகோபால் அவர்கள் தயாரிப்பில் தமிழ் மற்றும் மலையாளத்தில் கிரைம் திரில்லராக உருவாகியிருக்கும் படம் ‘சிட்தி’ ( SIDDY )
இந்த படத்தை பயஸ் ராஜ் (Pious Raj) எழுதி இயக்கியுள்ளார். அஜி ஜான் கதாநாயகனாக நடித்துள்ளார். அக்ஷயா உதயகுமார் மற்றும் ஹரிதா கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள்.

சட்டக் கல்லூரியில் படிக்கும் மாணவன் ” சிட்தி ” தவிர்க்க முடியாத சூழ்நிலையில் கொலையாளியாக மாறுகிறார். அவர் ஏன் கொலையாளியாக மாறினார் ? இறுதியில் என்ன நடந்தது ? என்பதை விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லியுள்ளார்கள்.
அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, இப்படம் விரைவில் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலிலையில் இப்படத்தின் தமிழ் பதிப்பின் இசை வெளியீட்டு விழா, இன்று சென்னையில் இனிதே நடைபெற்றது.
இவ்விழாவினில் .. தயாரிப்பாளர் ராஜன் பேசியதாவது:
“யா பிலிம் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் என்றவுடன் எனக்கு ஏ எம் ரத்னம் அவர்கள் தான் ஞாபகத்திற்கு வருகிறார். ஷங்கரை வைத்து, படமெடுத்து சம்பாதித்து அதே பணத்தை இங்கே படத்திலேயே விட்டுவிட்டு அதை அடைக்க தெலுங்கில் போய் படமெடுத்து கொண்டிருக்கிறார்.

சூர்யா பிலிம் புரொடக்சன்ஸ் நல்ல பெயர் நன்றாக வரும். இந்த கடின காலத்திலும் தமிழில் படத்தை கொண்டு வரும் தயாரிப்பாளர் இயக்குநருக்கு நன்றி.
மலையாள சினிமாவில் சினிமாவுக்கு உண்மையாக இருப்பார்கள். இப்போது நான் எல்லாம் மலையாளப்படம் பார்க்க ஆரம்பித்துவிட்டேன். தமிழ் சினிமாவில் தயாரிப்பாளரை சிரமப்படுத்துகிறார்கள் அவர்களை காப்பாற்றுங்கள் என்று தான் கேட்கிறேன்.
கேரளாவில் எல்லா நடிகர்களும் உதவி செய்கிறார்கள். இங்கே யார் உதவி செய்கிறார்கள். கொரோனா காலத்தில் ரஜினி சார் போன் செய்து என்ன உதவி வேண்டும் எனக்கேட்டு 100 மூட்டை அரிசி கொடுத்தார்.
ராம் சரண் படம் தோற்ற போது நான் ஹீரோ என்பதால் தான் படம் வாங்கினார்கள் என தயாரிப்பாளருக்கு 15 கோடியை திருப்பி கொடுத்தார். ராதே ஷ்யாம் படம் பெயிலர் பிரபாஸ் அந்த படத்திற்கு வாங்கிய பணத்தில் 50 கோடியை திருப்பி கொடுத்துவிட்டார். ராம் சரண், பிரபாஸை வணங்குகிறேன்.
வெற்றியில் பங்கு கொள்ளும் ஹீரோக்கள் தோல்வியிலும் பங்குகொள்ள வேண்டும். இந்தப்படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்.
Patrikai.com official YouTube Channel