ண்டிகர்

பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த பஞ்சாப் மாநில காங்கிரஸ் அமைச்சர் நவஜோத் சிங் சித்து சோனி டிவியின் கபில் சர்மா நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

நேற்று முன் தினம் பாகிஸ்தானின் தீவிரவாத இயக்கமான ஜெய்ஷ் ஈ முகமது இயக்கம் நடத்திய தற்கொலப்படை தாக்குதலில் 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். அத்துடன் நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். இதை ஒட்டி தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவு அளிப்பதை பாகிஸ்தான்  நிறுத்த வேண்டும் என இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன.

முன்னாள் கிரிக்கெட் வீரரும் பஞ்சாப் மாநில காங்கிரஸ் அமைச்சருமான நவஜோத் சிங் சித்து, “புல்வாமா தாக்குதலுக்காக ஒட்டு மொத்த பாகிஸ்தான் மீது பழி சுமத்துவதா? ஒரு தனி நபர் அல்லது இயக்கம் செய்துள்ள காரியத்துக்காக ஒரு நாட்டின் மீது பழி சுமத்துது எவ்வாறு சரி ஆகும்” என பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசி உள்ளார். இது நாட்டு மக்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

அர்ச்சனா பூரன் சிங்

தற்போது சோனி டிவியில் கபில்சர்மா நடத்தும் ஒரு டாக் ஷோவில் சித்து கலந்துக் கொள்கிறார். பாகிஸ்தானுக்கு எதிராக கருத்து சொன்ன சித்து இனி அந்நிகழ்வில் கலந்துக் கொண்டால் அந்த நிகழ்ச்சியை புறக்கணிக்க போவதாக பலர் சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளனர.   சோனி டிவியின் அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்திலும் இதை அவர்கள் பதிந்தனர்.

இதை ஒட்டி சோனி டிவியின் அதிகாரி ஒருவர், “நவஜோத் சிங் சித்துவின் கருத்துக்களை எளிதாக கொள்ள முடியாது. அவர் தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கு பெற்றால் ரசிகர்களிடம் இருந்து தேவையற்ற கண்டனங்களும் சர்ச்சைகளும் ஏற்ப்டும். அதனால் சித்துவை இந்நிகழ்வில் இருந்து நீக்க தீர்மானித்துள்ளோம். அவருக்கு பதிலாக நடிகை அர்ச்சனா பூரன் சிங் இனி பங்கேற்பார்” என தெரிவித்துள்ளார்.