பெங்களூரு

ரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு சலுகை அளிக்கப்பட்டிருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கர்னாடகா முதல்வர் சித்தராமையா கூறி உள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை  பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.   இவருக்கு சிறையில் சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டதாக டி ஐ ஜி ரூபா எழுப்பிய புகாரின் பேரில் விசாரணை நடைபெற்றது.

விசாரணையில் சிறை அதிகார் சத்யநாராயணராவ், “பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சில சிறப்பு சலுகைகள் வழங்க முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டிருந்தார்.   அவர் உத்தரவுக்கிணங்க சசிகலாவுக்கு சலுகைகள் வழங்கப்பட்டது.   இதற்காக லஞ்சம் பெறவில்லை”  என அறிவித்தார்.

தற்போது முதல்வர் சித்தராமையா, “நான் சிறை விதிகளின்படி மட்டுமே சசிகலாவுக்கு சலுகைகள் வழங்கச் சொல்லி இருந்தேன்.  விசேஷ சலுகைகள் அளிக்கப்பட்டிருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்”  எனக் கூறி உள்ளார்.