ஜாக்சன் துரை, சத்யா படங்களின் வெற்றிக்கு பிறகு சிபிராஜ் தனது தந்தை சத்யராஜுடன் இணைந்து மீண்டும் ஒரு கலகலப்பான காமெடி படத்தில் நடிக்கிறார்.
சத்யா படத்திற்க்கு பிறகு இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தியும், நடிகர் சிபிராஜும் இணைகிறார்கள். முற்றிலும் புதுவித திரைக்கதை கொண்ட இப்படத்தினை கிரியேட்டிவ் எண்டர்டெயினர்ஸ் அன் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் சார்பாக தனஞ்செயன் மற்றும் லலிதா தனஞ்செயன் தயாரிக்கிறார்கள்.
இப்படத்திற்கு சைமன் கே.கிங் இசையமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பரில் தொடங்கப்பட்டு ஒரே கட்டமாக ஜனவரியில் முடிக்கப்பட உள்ளது.