புளி காய்ச்சல்

1pulikaichal
தேவையான பொருட்கள்
புளி – ஒரு எலுமிச்சை அளவு
தாளிக்க
கடுகு, உளுந்து — 1 டீஸ்பூன்
கடலை பருப்பு — 1 டீஸ்பூன்
நிலக்கடலை பருப்பு — 2 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் — 5 எண்ணிக்கை
கறிவேப்பிலை — சி|றிதளவு
பெருங்காயம் — 11/2 டீஸ்பூன்
வெந்தயப் பொடி — 1 1/2 டீஸ்பூன்
மஞ்சள் பொடி — 1 டீஸ்பூன்
உப்பு — தேவையான அளவு
செய்முறை
புளியை ஊற வைத்து நீராக கரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணைய் ஊற்றி காய்ந்ததும் கடு, உளுந்து தாளித்து பின் கடலை பருப்பு போட்டு வதக்கி பின் நிலக்கடலை பருப்பு போட்டு வதக்கி அதனுடன் கறிவேப்பிலை, சிவப்பு வத்தல் போட்டு வதக்கி பின் கரைத்த புளி கரைசலை ஊற்றவும்.
அதனுடன் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றவும்.
பின் நன்கு கொதிக்க விடவும்.(10 Min)
ஊற்றிய எண்ணைய் நன்கு மேலே மிதந்து வரும் போது அடுப்பை நிறுத்தவும்.
சுவையான புளிக்காய்ச்சல் ரெடி.
சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும்.
புளி காய்ச்சலை ஃப்ரிஜ்ஜில் வைத்தால் 1 வாரம் வரை கெடாமல் இருக்கும்.