பிரமாண்டமாக உருவாகியுள்ள ‘கே.ஜி.எஃப்-2’ படத்தை இயக்கியுள்ள பிரசாந்த் நெயில், இதனை தொடர்ந்து பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் ‘சாலார்’ என்ற திரைப்படத்தை டைரக்டு செய்கிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் ‘பான் இந்தியா’ படமாக தயாராகும் ‘சாலார்’ படத்தில் தாதா வேடத்தில் பிரபாஸ் நடிக்கிறார்.
அவருக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ருதி ஹாசனுக்கு நேற்று 35 –வது பிறந்த நாளாகும். அவரது பிறந்த நாள் பரிசாக, இந்த வாய்ப்பை அளித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
பிரபாஸ் ஜோடியாக, ஸ்ருதி ஹாசன் நடிக்கும் முதல் படம் இது.
பிரபாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஸ்ருதிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருப்பதுடன், “உங்களுடன் நடிக்க ஆவலாக காத்திருக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
இதன் ஷுட்டிங் இன்று தொடங்குகிறது. இந்த ஆண்டு கடைசியில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
– பா. பாரதி