
நடிகை ஸ்ருதிஹாசன் கெளஹாத்தியைச் சேர்ந்த சாந்தனு ஹசாரிகா என்ற டூடுல் ஆர்டிஸ்ட் மற்றும் ராப் பாடகரை காதலிப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
இந்நிலையில் அவருடன் இருக்கும் ரொமாண்டிக் படங்களை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வைத்திருக்கிறார் ஸ்ருதி.
சமீபத்திய காலங்களில், ஸ்ருதிஹாசன் சந்தானு ஹசாரிகாவுடன் மும்பையில் பொதுவிடங்களுக்கு சென்று வந்ததும், அதைத் தொடர்ந்து சாந்தனு விமான நிலையத்திற்கு வந்து ஸ்ருதியை வழியனுப்பி வைத்த நிகழ்வுகளும் வழக்கமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ருதி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் சாந்தானுவைக் கட்டிப்பிடித்தபடி இருக்கும் சில புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். சென்னை சில்லிங் சீன்ஸ் என அதற்கு தலைப்பிட்டுள்ளார்.
Patrikai.com official YouTube Channel