நடிகை ஸ்ருதி ஹாசன் தற்போது, யூ.எஸ்.ஏ நெட்வொர்க்கின் பென் ஸ்மித் தயாரிக்கும் ‘ட்ரெட்ஸ்டோன்’ சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதில் டெல்லியைச் சேர்ந்த நிரா படேல் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஸ்ருதி ஹாசன்.

இதில் ஸ்ருதியை தவிர, மைக்கேல் ஃபோர்ப்ஸ், பாட்ரிக் ஃபுஜித், மைக்கேல் கேஸ்டன், டெஸ் ஹெளப்ரிச் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள்.

ஆபரேஷன் ட்ரெட்ஸ்டோன் என்பதை மையமாக வைத்து, ஜேசன் பார்ன் கதைகள் நடக்கும் உலகிலேயே நடப்பது போல ட்ரெட்ஸ்டோன் தொலைக்காட்சி தொடர் உருவாகிறது. இதன் முதல் சீசனில், சர்வதேச அளவில் ஸ்லீப்பர் ஏஜெண்டுகளாக செயல்படுபவர்களின் கதைகள் சொல்லப்படவுள்ளன.