
சென்னை
இன்று கட்சியை தொடங்கிய கமலஹாசனுக்கு அவருடைய மூத்த மகள் ஸ்ருதிஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கமலஹாசன் இன்று மதுரையில் தனது கட்சியின் பெயரையும் கொடியையும் அறிமுகம் செய்து வைத்தார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. பல அரசியல் வாதிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவரது மூத்த மகளான ஸ்ருதிஹாசன் டிவிட்டரின் தனது தந்தைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஸ்ருதி தனது பதிவில், “நான் எனது தந்தையின் அரசியல் பிரவேசத்துக்கும் அவர் எடுக்கப் போகும் அரசியல் மறுமலர்ச்சிக்கான முயற்சிக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அபிமான மகாத்மா காந்தியின் வார்த்தைகளில் உள்ளது போல நீங்கள் உலகை உங்கள் விருப்பப்படி மாற்ற வாழ்த்துகிறேன். உங்கள் உண்மையையும் நீதியையும் காக்கும் முயற்சி வெற்றி பெரும் என நம்புகிறேன்” என்னும் பொருளில் வாழ்த்துக் கூறி உள்ளார்.
[youtube-feed feed=1]