ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா நகரத்தில் தனது கணவர் ஆண்ட்ரே கொஸ்சீவுடன் வசித்து வருகிறார் நடிகை ஸ்ரேயா.

தன் கணவருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் இருப்பதை உணர்ந்த ஸ்ரேயா அவரை அருகிலுள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் அங்கு ஆண்ட்ரேவுக்கு கொரோனா இல்லையென்றும் இங்கு தங்கியிருந்தால் தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக திருப்பி அனுப்பியுள்ளனர் .

இதனையடுத்து இருவரும் சுயதனிமைப்படுத்தலை கடைபிடித்து, வீட்டிலேயே இருந்து சிகிச்சை எடுத்து வந்துள்ளனர் .

தற்போது ஸ்ரேயாவின் கணவர் ஆண்ட்ரே கொஸ்சீவ் கொரோனா அறிகுறிகளில் இருந்து குணமடைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

[youtube-feed feed=1]