ஸ்ரேயா கடைசியாக தமிழில் கார்த்தின் நரேன் இயக்கிய நரகாசூரன் படத்தில் நடித்தார். அந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை.

நேற்று முன்தினம் ஸ்ரேயா கணவருடன் திருப்பதி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். கோயில் வளாகத்தினுள் ஆன்ட்ரி கோஸ்சீவா ஸ்ரோவுக்கு முத்தம் தரும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது .

இதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கோயிலுக்குள் முத்தமிட்டு அதன் புனிதத்தை ஸ்ரேயாவும், அவரது கணவரும் கெடுத்துவிட்டதாக சிலர் குற்றம்சாட்டியுள்ளனர்.