டெல்லி: மத்திய பாதுகாப்புத்துறை புதிய செயலாளராக கேரளாவை சேர்ந்த ராஜேஷ் குமார் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று (நவம்பர் 1ந்தேதி) டெல்லி சவுத் பிளாக்கில் உள்ள பாதுகாப்புத்தறை அலுவலகத்தில் பாதுகாப்பு செயலாளராக பொறுப்பேற்றார்.
த்திய பாதுகாப்புத்துறையின் தற்போதைய செயலாளர் கிரிதர் அரமனே, வரும் டிசம்பர் 31ஆம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளார். இதையடுத்து தற்போது பாதுகாப்புத்துறை செயலாளர் சிறப்பு பணி அதிகாரியாக உள்ள ராஜேஷ் குமார் சிங் பாதுகாப்புத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ராஜேஷ் குமார் சிங் கேரள மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர். 1989ஆம் ஆண்டில் ஐஏஎஸ் தேர்ச்சி பெற்றவராவார். இதற்கு முன்பு மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகத்தின் கீழ் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையின் செயலாளராக இருந்தார்.அதற்கும் முன்பாக மத்திய கால்நடைத்துறை மற்றும் பால்வளம், மீன் வளத்துறை செயலாளராகவும் இருந்தார். மேலும் மத்திய அரசு, கேரளமாநிலத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
இதையடுத்து அவரை மத்தியஅரசு,. மத்திய பாதுகாப்புத்துறை செயலாளராக நியமனம் செய்தது. இதையடுத்து, அவர் நேற்று (நவம்பர் 1ந்தேதி) பொறுப்பேற்றுக்கொண்டார். பொறுப்பேற்கும் முன்பு, டெல்லியில் உள்ள போர் நினைவிடத்தில் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.