டெல்லி: ரூபாய் நோட்டில் பிள்ளையார் (கணேஷ்), லட்சுமி படத்தை போடுங்கள் என ஆம்ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் மோடியை வலியுறுத்தி உள்ளார். தனக்கு இந்த ஐடியா, தீபாவளியன்று உதித்ததாக தெரிவித்து உள்ளார். அவரது ஐடியா சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புதிய ரூபாய் நோட்டுகளில் இடம்பெறும் காந்திஜியின் புகைப்படத்துடன் கணேஷ் ஜி மற்றும் ஸ்ரீ லக்ஷ்மி ஜி ஆகியோரின் புகைப்படத்தையும் வைக்குமாறு மத்திய அரசு மற்றும் பிரதமரிடம் கேட்டுக்கொள்கிறேன் என்று டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து  இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, , நாட்டிற்கு கடவுளின் ஆசீர்வாதம் தேவை என்று கூறியதுடன், மத்தியஅரசுக்கு பல்வேறு பரிந்துரைகளையும் தெரிவித்தார்.

அதன்படி, இந்திய ரூபாய் நோட்டுகளில்  மகாத்மா காந்தியுடன் லட்சுமி தேவி மற்றும் விநாயகப் பெருமானின் புகைப்படங்கள் இருக்க வேண்டும் என்று கூறியதுடன், இனிமேல் வெளியாகும்  புதிய ரூபாய் நோட்டுகளில் காந்திஜியின் புகைப்படத்துடன் விநாயகர் மற்றும் லட்சுமியின் புகைப்படத்தை வைக்க மத்திய அரசு மற்றும் பிரதமரை நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.

ஒரு பக்கம் மகாத்மா காந்தியின் புகைப்படமும், மறுபுறம் லட்சுமி தேவி மற்றும் விக்ன விநாயகரின் புகைப்படமும் இருக்க வேண்டும் என்றும், அப்படி இருந்தால், முழு நாட்டுக்கும் கடவுள்களின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்றும் தெரிவித்த கெஜ்ரிவால், பழைய நோட்டுகளை மாற்ற வேண்டும் என்று தான் பரிந்துரைக்கவில்லை என்றும், புதிய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும்போது, இந்த நடைமுறையை மத்திய அரசு தொடங்க வேண்டும், புதிதாக அச்சடிக்கும் ரூபாய் நோட்டுகளில் கணபதி மற்றும் லட்சுமி தேவியின் படங்கள் இருக்கலாம் என்றார்.

இதற்கு எடுத்துக்காட்டாக இந்தோனேசியா நாட்டை சுட்டிக்காட்டியதுடன், “இந்தோனேசியா ஒரு முஸ்லீம் நாடு, அந்நாட்டின் மக்கள்தொகையில் 85% முஸ்லிம்கள் இருக்கிறார்கள். அங்கு இந்துக்களின் மக்கள் தொகை, மொத்த மக்கள்த்தொகையில் 2% மட்டுமே என்றாலும், அவர்களின் நாணயத்தில் விநாயகப் பெருமானின் படம் உள்ளது.  இது ஒரு முக்கியமான விஷயம் என்று நான் நினைக்கிறேன். இதை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

“ரூபாய் நோட்டில், லட்சுமி தேவியும், விக்ன விநாயகரும் இடம் பெருவதால் நாட்டின் பொருளாதாரம் மேம்படும் என்று நான் கூறவில்லை, அதற்கு நிறைய முயற்சிகள் தேவைப்படும், ஆனால் கடவுளின் ஆசீர்வாதம் இருந்தால் மட்டுமே முயற்சிகள் பலனளிக்கும்” என்று கூறியதுடன்,  தீபாவளி பூஜை செய்யும் போது தான், தனக்கு இந்த எண்ணம் தோன்றியதாகவும், இந்த எண்னத்தை எதிர்க்க வேண்டாம் என்றும் கூறிய அவர், நாட்டின் செழிப்புக்காகவாவது இந்த கருத்தை எதிர்க்க வேண்டாம் என்ரு கூறினார்.