
ஸ்ரேயாவும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் பிராவோவும் காதலிப்பதாகவும் இருவரும் இணைந்துள்ள புகைப்படம் இணையதளங்களில் டிரெண்ட் அடித்து வருகின்றது.
கடந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல் போட்டியின் போது இருவரும் நட்பு ரீதியாக பழக்கமானார்களாம், ஸ்ரேயாவுக்கு நிறைய உறவினர்கள் அமெரிக்காவில் உள்ளதால ஆண்டு தோரும் அங்கு சென்று சந்தோஷங்களை பகிர்ந்து கொள்ளுவது வழக்கம் அதன்படி அமெரிக்காவிற்குச் சென்ற அவர்,அங்குள்ள ஒரு ஸ்டார் ஹோட்டலில் தங்கியுள்ளார். அதே ஹோட்டலில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் பிராவோவும் தங்கியிருந்துள்ளாராம். இந்நிலையில், ஹோட்டலில் இருவரும் எதிர்பாராத விதமாக சந்தித்துக் கொண்டதாக கூறப்படுகின்றது.
இயல்பான இந்த சந்திப்பின்போது, யாரோ ஒருவர் இருவரும் இருக்கும் போட்டோ எடுத்து அதை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். உடனே சிலர் இருவரும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் வதந்திகள் பரப்பி வருகின்றனர்.
ஸ்ரேயா குடும்பத்துக்கு நெருக்கமான ஒருவரை ஸ்ரேயாவுக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர்கள் முடிவு செய்துள்ளதாகவும், இதை ஸ்ரேயாவும் ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதை போன்ற வதந்திகள் எங்கு போய் முடிய போகுதோ?
Patrikai.com official YouTube Channel